மல்வானையில் வயலிலிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு!

99 0

கம்பஹா, தோம்பே, மல்வானை பிரதேசத்தில் வயலொன்றிலிருந்து இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தோம்பே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாவலதென்னவத்த மற்றும் ரம்பொட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 18 மற்றும் 29 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் கடந்த 22 ஆம் திகதி அன்று அவர்கள் தங்கியிருக்கும் விடுதியிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் அவர்கள் மீண்டும் திரும்பி வராததால் குறித்த விடுதியிலிருந்த நபரொருவர்  இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தோம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.