கொள்ளுப்பிட்டி தனியார் வைத்தியசாலை ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டது !

127 0

கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில்  நேற்று வெள்ளிக்கிழமை (24) தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் தீ பரவியதன் காரணமாக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புத் துறைக்குத் தகவல் வழங்கப்பட்டது .

பின்னர்,  இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டதாகவும், தீ முற்றாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும்  கொழும்பு மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

இந்த தீ பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.