பமுனுகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூரியமல்வத்த பிரதேசத்தில் கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பமுனுகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சடலமானது நேற்று (24) வெள்ளிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இவர் 35 முதல் 40 வயதுக்குட்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரது சடலம் கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

