சந்தேக நபரொருவரை கைது செய்வதற்காகக் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களிடம் தகவல் கோரியுள்ளனர்.
சந்தேக நபர் தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் இவர் 5 அடி 6 அங்குலம் உயரம் உடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் தொடர்பில் தகவல் கிடைத்தால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 071-8591753, 071-8591774 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சந்தேக நபர் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு 20 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் எனவும் தகவல் வழங்கியவர் தொடர்பான தனிப்பட்ட தகவல்கள் இரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

