முல்லைத்தீவில் துப்பாகி ரவைகளுடன் ஒருவர் கைது

17 0

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் துப்பாக்கி ரவைகளுடன் ஒருவரை முள்ளியவளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை முள்ளியவளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்று (23.05.2024) இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வான் ஒன்றினை சோதனை செய்த முள்ளியவளை பொலிஸார் வாகனத்தின் சாவி பெட்டியில் இருந்து ஒருகைக்குண்டு, ரி – 56 ரக தோட்டாக்கள் 20 மற்றும் எல்.எம்.ஜி ரக தோட்டாக்கள் 6 ஆகியவற்றை மீட்டுள்ளனர்.

சம்பவத்தில், வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு எதிர்வரும் 26 ஆம் திகதி ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.