திருகோணமலையில் கார் விபத்து: சிறுமி ஒருவர் பரிதாபமாக பலி

18 0

திருகோணமலை  ஈச்சிலம்பற்று, வட்டவன் பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவமானது இன்று (23.05.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில், 6 வயதுடைய நிதர்சன் ஆதித்யா எனும் சிறுமி உயிரிழந்துள்ளதுடன் சிறுமியின் சகோதரனான 4 வயதுடைய நிதர்சன் அதிரேஸ் எனும் சிறுவன் படுகாயமடைந்துள்ளார்.

இவ்வாறு படுகாயமடைந்த சிறுவன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.