அசுத்தமான தண்ணீரை பருகும் 200 கோடி பேர்: உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்

225 0

உலகத்தில் உள்ள மக்களில் சுமார் 200 கோடி பேர் அசுத்தமான தண்ணீரையே பருகி வருதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

உலகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் சுமார் 200 கோடி பேர் அசுத்தமான தண்ணீரையே பருகி வருதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

சுத்தமான நீரும், சுகாதாரமும் கிடைக்க உலக நாடுகள் இணைந்து வியத்தகு முன்னேற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது. இவ்வாறாக அசுத்தமான குடிநீரை பருகும் 5 லட்சம் பேர் வயிற்றுப்போக்கால் மரணரமடைவதாக அமெரிக்காவில் செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்பின் பொதுச் சுகாதாரத் துறையின் தலைவரான மரியா நெய்ரா தெரிவித்துள்ளார்.

மேலும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கழிவுகளிலிருந்தே நீரினை பெறுவதாக கூறப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து கழிவிலிருந்து பெறப்படும் நீரினை பருகுபவர்கள் காலரா, வயிற்றுக்கடுப்பு, டைபாய்டு மற்றும் போலியோ உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகின்றனர்.

சுத்தமில்லாத நீரை பருகும், சுமார் 5 லட்சம் பேர் பின்வரும் நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதாவது, பல்வேறு புறக்கணிக்கப்பட்ட நோய்கள், வெப்பமண்டல நோய்கள், குடல் புழுக்கள், ஸ்சிஸ்டோசோமியாஸிஸ், மற்றும் கண்நோய் என பல்வேறு தாக்கத்துக்கு ஆளாகின்றனர்.

எனவே உலக நாடுகள் ஒன்றிணைந்து இந்த முக்கிய பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். அனைவரும் சுத்தமான நீரை பருக, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய வாழ்விற்கு அனைத்து நாட்டு அரசுகளும் தனி தொகையை ஒதுக்கி அதற்கான வேலைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.