குடும்ப முறுகல் கைகலப்பாக மாறியதில் அண்ணணை, தம்பி கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அண்ணன், ஆபத்தான நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (12) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் ஐந்து மாடி குடியிருப்பு, கடற்கரை வீதி, குருநகர் பகுதியினை சேர்ந்த வயது 38 நபரே வயிற்றில் குத்துக் காயங்களுக்கு உள்ளானார்.
இந்தநிலையில் அவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சகோதரனான 35 வயதுடைய நபர், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

