கடுவலையில் துப்பாக்கிச் சூடு; இருவர் உயிரிழப்பு

314 0

மாலபே – கடுவலை பிரதான வீதியின், கொத்தலாவல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இந்த இருவர் மீது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரினால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி கூறினார்.

பாதாளஉலக குழுக்களிடையே நீண்ட நாட்களாக காணப்பட்டு வந்த மோதல் நிலை காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் நம்புகின்றனர்.
நவகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.