புத்தாண்டில் விபத்துக்களிலிருந்து எச்சரிக்கையாயிருங்கள்- விபத்துப் பிரிவு

285 0

தமிழ், சிங்கள புத்தாண்டின் போது பட்டாசு போன்ற வெடி பொருட்களை  பயன்படுத்துவோர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்துப் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பற்றவைத்த பின்னர் வெடிக்காத பட்டாசுகளை பிடித்துப் பார்ப்பதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். வெடிபொருட்களை பயன்படுத்தி விளையாடுவதையும் தவிர்ந்து கொள்ளுங்கள். இதனால், கடந்த காலங்களில் பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பிரிவின் விபத்துக்களைத் தவிர்ப்பதற்கான ஆலோசகர் புஷ்பா டி சொய்ஷா தெரிவித்துள்ளார்.

பட்டாசு வெடிபொருட்கள் போன்று ஏனைய விபத்துக்களிலிருந்தும் முடிந்தவரை கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.