55 கிலோ கிராம் கேளர கஞ்சா மீட்பு

297 0

நெடுந்தீவு – வள்ளியாறு கடற்பரப்பில் வைத்து, கைவிடப்பட்ட நிலையில் இருந்த சுமார் 55 கிலோ கிராம் கேளர கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

5 மற்றும் 4 கிலோ பொதிகளாக அவை பொதி செய்யப்பட்டிருந்த நிலையில் கடற்படையினர் நேற்று இவற்றை கைப்பற்றியுள்ளனர்.

குறித்த கடற்பரப்பில் கஞ்சா கைவிட்டுச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவல் ஒன்றின் அடிப்படையில் இவை மீட்கப்பட்டுள்ளன