விமான தபால் சேவை மூலம் அனுப்பப்பட்ட 9 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் சிக்கின

33 0

பல்வேறு நாடுகளிலிருந்து விமான தபால் சேவை மூலம் கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட 9 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் அடங்கிய 10 பொதிகள் சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் இன்று (15) கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த பொதிகளானது கனடா, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து தெஹிவளை, வெள்ளவத்தை மற்றும் வேயங்கொடை ஆகிய பிரதேசங்களுக்கு விமான தபால் சேவை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த பொதிகளிலிருந்து 150 போதை மாத்திரைகள், 466 கிராம் “குஷ்” , கஞ்சா மற்றும் 10 கிராம் கொக்கேயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.