மட்டக்களப்பில் இ.போ.ச பேருந்து சாரதி, நடத்துநர் மீது தனியார் பேருந்து சாரதி தாக்குதல்

32 0

ட்டக்களப்பு நகரில் உள்ள பேருந்து தரிப்பு நிலையத்தில் இன்று புதன்கிழமை (15) இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து வண்டி சாரதி மற்றும் நடத்துநர் மீது தனியார் பேருந்து சாரதி தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்த தாக்குதலில் இ.போ.ச. பேருந்த சாரதியும் நடத்துநரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதலில் ஈடுபட்ட சாரதி தனது பேருந்துடன் தப்பி ஓடியுள்ள நிலையில், அப்பேருந்தின் நடத்துநரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பேருந்து தரிப்பு நிலையத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் பயணிகளை ஏற்றுவதற்காக இத்தனியார் பேருந்து தரித்து நின்றுள்ளது.

இதன்போது பின்னால் கல்முனையை நோக்கி பயணித்த மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து வந்துள்ளது.

அவ்வேளை, இ.போ.ச பேருந்தை தரித்து நிறுத்துவதற்காக, அதன் சாரதி முன்னதாக நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்தை சற்றே முன்னோக்கி நகர்த்துமாறு தெரிவித்துள்ளார்.

இதனால் இரு சாரதிகளுக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி, தனியார் பேருந்து சாரதி கோபமடைந்து இ.போ.ச பேருந்து சாரதி மற்றும் நடத்துநரை தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு,  தனியார் பேருந்து சாரதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை,  தனியார் பேருந்து நடத்துநரை கைது செய்துள்ளதாகவும் தப்பி ஓடிய சாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.