நுவரெலியா கிரேகறி வாவி பிரதேசத்தில் வசந்த காலத்தை முன்னிட்டு பல்வேறுப்பட்ட களியாட்ட நிகழ்வுகள்(காணொளி)

309 0

வசந்த காலத்தை முன்னிட்டு நுவரெலியா கிரேகறி வாவி பிரதேசத்தில் பல்வேறுப்பட்ட களியாட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

பலவித படகு சவாரி, சைக்கிள் ஓட்டம், அழகான சூழல், மலர்கள், சிறுவர் களியாட்டங்கள், குதிரை ஓட்டம், மெரிகவுன்ட் போன்ற பல்வேறுபட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

பிரிடிஷ் ஆளுனர் வில்லியம் தனது காலத்தில், நுவரெலியா நகரத்திற்கு நீர் மின்சாரத்தை வழங்கும் நோக்குடன் கிரேகறி வாவியை அமைத்தார்.

கிரேகரி வாவியினை நிலைபேறான வழியில் நிர்வகித்த மத்திய சுற்றாடல் அதிகார சபை, விஷேட வர்த்தமானி மூலம் சுற்றாடல் பாதுகாப்பு இடமாக பிரகடனப்படுத்தியது.

மூடுபனி மலைத்தொடர் மத்தியில் ‘சமதரை நகரம்’ என்றழைக்கப்படும் மென்மையான அலைகளின் கீழே உருளும் கிரகேறி வாவி, மக்களின் அமைதியை அனுபவித்து ஓய்வெடுக்கும் இடமாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.