நெதர்லாந்தில் தேசிய மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2024

145 0

நெதர்லாந்தில் தேசிய மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 12-05-2024 ஞாயிறு ஹோறன் நகரில் ஸ்பான்புறூக் என்னுமிடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுமார் 09:30மணியளவில் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பித்த நிகழ்வு, தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு, பின் ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம் மலர்வணக்கம் என ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து 10.00மணியளவில் உதைபந்தாட்டப்போட்டிகள் ஆரம்பித்து அனைத்துப் போட்டிகளும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. நடைபெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டிகளில்,

வளந்தோர்கான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில்.

முதலாமிடத்தை Breda விளையாட்டுக் கழகமும்

இரண்டாமிடத்தை YMTA விளையாட்டுக் கழகமும்.

11வயதுக்குட்பட்டோர் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில்.

முதலாமிடத்தை YMTA விளையாட்டுக் கழகமும்

இரண்டாமிடத்தை Amsterdam விளையாட்டுக் கழகமும்.

15வயதுக்குட்பட்டோர் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில்.

முதலாமிடத்தை இளம்பூக்கள் விளையாட்டுக் கழகமும்.

இரண்டாமிடத்தை Rotterdam விளையாட்டுக் கழகமும்.

பெற்றுக் கொண்டன.

மக்களின் ஆரவாரத்துடன் விறுவிறுப்பாக நடைபெற்ற இப் போட்டிகள் வெற்றி பெற்ற கழகங்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும் வெற்றிப் பதக்கங்களும் வழங்கப்பட்டு பின் தேசியக் கொடிகள் கையேற்றலைத் தொடர்ந்து சுமார் 19;00 மணியளவில் எமது தாரக மந்திரமாம் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற கோசத்துடன் இனிதே நிறைவடைந்தது.