கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்ய 3 இடங்கள், செப்டம்பர் முதல் அமுல்

533 0

அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என்பவற்றை நடாத்துவதற்கு கொழும்பு நகரில் விசேடமாக மூன்று இடங்களை அறிமுகம் செய்வதற்கும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அதனை சட்டமாக்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பொது மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாதவிதமாக இந்த இடங்களை தீர்மானிப்பதற்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு பணிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் என்பவற்றில் கலந்துகொள்வதற்காக வரும் மக்களுக்குக் தேவையான மலசலகூட வசதிகள், உணவு விநியோகத்துக்கான ஏற்பாடுகள் என்பவற்றை செய்து கொடுப்பதற்கும் பிரதமர் குறித்த அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.