போதை மாத்திரைகளை விற்பனை செய்த சந்தேகத்தில் மூவர் மருதானை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மத்திய பிராந்திய சட்ட நடைமுறைப்படுத்தல் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருதானை பகுதியில் வேன் ஒன்றில் போதைப்பொருள் கொண்டுசென்ற நபரொருவரை கைது செய்து மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் இந்த வர்த்தகம் தொடர்பாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 27 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

