காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுத்தையின் சடலம் மீட்பு!

114 0

காயங்களுடன் மர்மமான முறையில்  உயிரிழந்த சிறுத்தையின் சடலம் இன்று புதன்கிழமை (08) ஹட்டன் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது .

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேயிலைத் தோட்டத்தின் மேல் பகுதியிலுள்ள வனப்பகுதியில் இந்த சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது .

சிறுத்தையின் வயிற்றிலும் முதுகிலும் பெரிய காயம் ஏற்பட்டுள்ளதாகவும் , இரு சிறுத்தைகள் சண்டையிட்டதன் காரணமாக இந்த சிறுத்தை உயிரிழந்திருக்கலாம் என நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

உயிரிழந்த சிறுத்தையின் சடலம் நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.