பன்றி இறைச்சி உட்கொண்ட இரு கைதிகள் திடீர் சுகயீனமுற்று உயிரிழப்பு!

12 0

கொழும்பு, மெகசின் சிறைச்சாலைக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் பன்றி இறைச்சி உட்கொண்ட நிலையில் திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பொரல்லை மற்றும் தெஹிவளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் கொழும்பு, மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளனர்.

இந்நிலையில், கைதி ஒருவரை சந்திப்பதற்காகச் சென்ற உறவினரொருவர் அவருக்கு பன்றி இறைச்சியுடனான உணவுப் பொதியொன்றை கொடுத்துள்ள நிலையில் அந்த உணவுப்பொதியை சிறைச்சாலைக்குள் இருந்த 15 கைதிகள் உட்கொண்டுள்ளனர்.

இதன்போது, மூன்று கைதிகள் திடீரென சுகயீனமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மற்றையவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனைகள் நேற்று (07) நடத்தப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சிறைச்சாலைகள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.