ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலை நடத்துவதற்கு 5 மாதங்கள் செல்லும்

256 0

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலை நடத்துவதற்கு 5 மாதங்கள் வரையில் செல்லும் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் மறைவை அடுத்து வெற்றிடமான ஆர்.கே.நகர் தொகுதியில், இடைத் தேர்தல் நடாத்த தீர்மானிக்கப்பட்டது.

இதனையடுத்து தேர்தல் பிரசாரங்கள் மும்முரமாக நடைப்பெற்றது.

இந்தநிலையில் தேர்தலை முன்னிறுத்தி அங்கு பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

குறிப்பாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் சசிகலா சார்பாக செயற்படும் சுகாதார அமைச்சர் சி. விஜயபாஸ்கர் 89 கோடி ரூபாவினை வாக்காளர்களுக்கு வழங்கியதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கமைய அங்கு தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை என தெரிவித்து தேர்தல்கள் ஆணையகம் தேர்தலை ரத்து செய்தமை குறிப்பிடத்தக்கது.