நீதிமன்ற தீர்ப்புக்கு முன் வழக்கு தீர்ப்பு வெளிவந்திருப்பது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும்

17 0

எமக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பானது  இன்னும் வழங்கப்படாத நிலையில் இரண்டு நீதிபதிகள் குறித்த தீர்ப்பை எழுதி  இருப்பதாக எதிர்க்கட்சித் பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார். இது பாரிய சிறப்புரிமை மீறலாகும்.

அதேநேரம் சட்டத்தில் தலையீடு செய்யப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. அதனால் நீதிமன்ற தீர்ப்பு வழங்காத நிலையில் அந்த தீர்ப்பு எவ்வாறு வெளியில் வந்தது என்பது தொடர்பில்  தெரிவுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) சிறப்புரிமை மீறல் பிரச்சினை ஒன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

எமக்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கு தீர்ப்பு ஒன்றுதொடர்பில் எதிர்க்கட்சி பிரதமகொறடா சபையில் தெரிவித்திருந்தார்.

அதில் எமக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்த 3 நீதிபதிகளில் 2நீதிபதிகள் தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும் ஒரு நீதிபதி அதனை வழங்காமல் இருக்கின்றார். அதனால் விரைவாக வழக்கிற்கு  தீர்ப்பை வழங்காவிட்டால் அவரின் பெயரை வெளியிடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பியின் இந்த கூற்று பாரிய சிறப்புரிமை மீறலாம். அதேநேரம் இந்த வழக்கில் தலையீடுகள் இடம்பெற்றிருக்கிறதா என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது.

அதனால் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னர் அந்த தீர்ப்பு எவ்வாறு வெளியில் வந்தது என்பது தொடர்பில்  தெரிவுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

மேலும் குறித்த வழக்கை விசாரணை செய்த 3 நீதிபதிகளில் 2 நீதிபதிகள் வழக்கு தீர்ப்பை எழுதியுள்ளதாக இந்த சபையில் பல தடவைகள் தெரிவித்திருந்தார். இந்த விடயத்தை எப்படி  லக்ஷ்மன் கிரியெல்ல தெரிந்துகொண்டார். இது பாரிய பிரச்சினை. அதனால் இதுதொடர்பாக தெரிவுக்குழு  அமைத்து, அதற்கு குறித்த நீதிபதிகளையும் அழைத்து விசாரணை நடத்த வேண்டும். என்றார்.