யாழில் லொறியும் முச்சக்கர வண்டியும் கோர விபத்து – ஒருவர் படுகாயம்!

34 0

யாழ்ப்பாண நகரை அண்மித்த நாலுகால் மட சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (23) மதியம் இடம்பெற்ற விபத்து ஒன்றில் முச்சக்கர வண்டி ஒன்று பட்டாரக வாகனத்துடன் விபத்துக்குள்ளாகி முற்றாக சேதமடைந்ததோடு முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிசார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் – மானிப்பாய் –  காரைநகர் பிரதான வீதியில் நாலுகால்மடம் சந்தியில் அமைந்துள்ள அரைக்கும் ஆலை ஒன்றில் இருந்து பிரதான வீதியில் முச்சக்கர வண்டி பயணிக்க தொடங்கிய நிலையில் பின்புறமாக ஆறுகால்மடம் பகுதியில் இருந்து வருகை தந்த பட்டாரக வாகனம் மோதியது.

இதன் போது முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்தது. முச்சக்கர வண்டியினை செலுத்திய ஆறுகால்மடம் பகுதியினை சேர்ந்த 20 வயதான அஜிந்தன் எனும் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதேவேளை பட்டாரக வாகனம் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பத்துடன் மோதி பகுதியளவில் சேதமடைந்த நிலையில் வாகன சாரதி காயங்களின்றி மீட்கபட்டார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ் மாவட்ட போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.