ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தியின் யோசனைகளை கத்தோலிக்க திருச்சபை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை

18 0

ஐக்கிய மக்கள்சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் சமர்ப்பித்துள்ள உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான யோசனைகளை  கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளவில்லை என அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் தங்கள் யோசனைகளை சமீபத்தில் சமர்ப்பித்திருந்தன.

அவர்களின் யோசனைகளை நாங்கள் ஆராய்ந்த பின்னரே அதனை ஏற்றுக்கொள்ளவதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் இரண்டு கட்சிகளும் யோசனைகளை சமர்ப்பித்துள்ளனர் என்பது உண்மை ஆனால் அதன் அர்த்தம் நாங்கள் அதனை ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்பதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கர்தினால் சில அரசியல்கட்சிகளிற்கு மக்கள் ஆதரவை கிடைப்பதை உறுதி செய்ய முயல்கின்றாரா என சந்தேகம் எழுந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்க பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்தஞாயிறுதாக்குதல் இடம்பெற்றவேளை இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தவர் ரங்கபண்டார உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரும் பல மாதங்கள் அந்த அரசாங்கம் ஆட்சியிலிருந்தது அதன் காரணமாக அவர்களிற்கு உரிய விசாரணையை முன்னெடுப்பதற்கு போதிய காலமிருந்தது என தெரிவித்துள்ள அருட்தந்தை ஏனைய கட்சிகளும் தங்கள் யோசனைகளை முன்வைக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.