விசேட தேவையுடைய முன்னாள் போராளிகள் விடயத்தில் அரசாங்கம் எந்தத் திட்டங்களையும் முன்னெடுக்க வில்லை – வியாழேந்திரன்

513 0

விசேட தேவையுடைய முன்னாள் போராளிகள் விடயத்தில் அரசாங்கம் எந்தத் திட்டங்களையும் முன்னெடுக்க வில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் வியாழேந்திரன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

விசேட தேவையுடைய முன்னாள் போராளிகளுக்கு உதவித் திட்டங்களை மேற்கொள்வதில் கடந்த அரகங்கத்தை போன்றே தற்போதைய அரசாங்கமும் செயற்படுகின்றது.

இந்த நிலையில், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சமூகத்தில் ஒதுங்கி தனிமைப்பட்டு இருக்காது முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும் என வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.