ரணில், ஜப்பான் பிரதமருடன் நாளைதினம் முக்கிய பேச்சுவார்த்தை

289 0
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் நேரப்படி மாலை 5.30 அளவில் அந்நாட்டை சென்றடைந்தார்.
ஜப்பான் பிரதமரின் விசேட ஆலோசகர் ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஆகியோர் பிரதமர் உள்ளிட்ட குழுவினரை வரவேற்றுள்ளனர்.
ஏழு நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜப்பான் சென்றுள்ளார்.
எதிர்வரும் 16ஆம் திகதி வரை அங்கு தங்கியிருபார் பிரதமர், ஜப்பான் பிரதமருடன் நாளைதினம் முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.
அத்துடன், ஜப்பானின் அரச உயர்மட்ட முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரiயும் சந்தித்து முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.