80 மில்லியன் ரூபாவால் அதிகரித்த வருமானம்!

42 0

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருட புத்தாண்டு காலத்தில் அதிவேக வீதிகளின் வருமானம் 80 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன் பணிப்பாளர் நாயகம் பிரியந்த சூரியபண்டார இன்று (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த வருடம் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான 06 நாட்களில் அதிவேக வீதிகளின் வருமானம் 235 மில்லியன் ரூபாவாக பதிவாகி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.