“வாழைத்தோட்டம் தினுக”வின் உதவியாளர் 6 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் கைது

123 0

துபாயில் உள்ள பாதாள உலக உறுப்பினரான “ வாழைத்தோட்டம் தினுக” வின் உதவியாளர் ஒருவர் 6 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக  மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

மாளிகாவத்தை பொலிஸாருக்கு கிடைத்த  தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் , இந்த போதைப்பொருட்களை  கிராண்ட்பாஸ் பிரதேசத்திற்கு எடுத்துச் செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் சந்தேக நபரிடமிருந்து 1 கிலோ கிராம் 105 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் போதைப்பொருள் விற்பனையில் கிடைத்ததாகக் கூறப்படும் 750,000 ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபராவார்.

இவர் வெளிநாட்டில் உள்ள பாதாள உலக உறுப்பினர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய பல்வேறு பிரதேசங்களுக்குப் போதைப்பொருட்களை விற்பனை செய்து பணப்பரிமாற்றம் செய்வதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இன்று வியாழக்கிழமை (11) மாளிகாகந்த நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.