நுங்கு வெட்ட பனையில் ஏறிய 3 பிள்ளைகளின் தந்தை கீழே விழுந்து உயிரிழப்பு

20 0

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நுங்கு வெட்ட பனை மரத்தில் ஏறி தவறி வீழ்ந்ததில் மூன்று பிள்ளைகளின் இளம் தந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று செவ்வாய்க்கிழமை (9) கைதடி பகுதியில் இடம் இடம்பெற்றுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நுங்கு வெட்டிக்கொடுக்க பனை மரத்தில் ஏறிய போது தவறி வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் கைதடி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்வராசா கேதீஸ்வரன் வயது 41 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.