பாதாள உலகக்குழுக்களை இலக்கு வைத்து விசேட பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழு

174 0

மேல் மாகாணத்தில் இடம்பெறும் பாதாள உலகக்குழுவினரின் செயற்பாடுகளை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்காக விசேட பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழுவொன்று பயிற்றுவிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கீழ் பயிற்றுவிக்கப்பட்டு வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாதாள உலகக் குழுக்கள் மற்றும் துப்பாக்கிதாரிகளை ஒடுக்குவது தொடர்பில் இந்த குழுவினருக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதுடன், விசேட சீருடைகளும் வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில், இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் உள்ள திறமையான பொலிஸ் உத்தியோகத்தர்களை இந்த குழுவில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த விசேட பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழு மேல் மாகாணத்தின் கொழும்பு வடக்கு ,கொழும்பு தெற்கு  மற்றும் கொழும்பு மத்திய பகுதிகளில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.