ஆனந்தபுரத்து நாயகர்களின் நினைவெழுச்சி நாள்-Belgium

83 0

2009 அன்று நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது சித்திரை மாதம் ஆனந்த புரம் பகுதியில் எமது தேசியத்தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்து களமுனை தளபதிகளாக பல சவால்களை எதிர்கொண்டு இரவு பகல் பாராமல் களமுனைகளை நேரடியாக வழிநடத்திய வீரத்தளபதிகளான பிரிகேடியர் தீபன்,பிரிகேடியர் ஆதவன்,பிரிகேடியர் மணிவண்ணன் பிரிகேடியர் விதுசா,பிரிகேடியர் துர்கா மற்றும் அன்றைய நாள்களில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களையும் உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டது.

மேற்படி வணக்க நிகழ்வானது பெல்சியத்தில் அன்ற்வேர்ப்பன் மாநிலத்தில் 07.04.2024அன்று முதன்மையாக பொதுச்சுடர் ஏற்றல்,தமிழீழ தேசியக்கொடி ஏற்றல்,திருவுருவப்படங்களிற்கான ஈகைசுடர் ஏற்றல் மலர்வணக்கம் ,அகவணக்கம் என்பன இடம்பெற்று தொடர்நது எழிச்சி நிகழ்வுகளான தாயகப்பாடல்கள்,நடனங்கள், கவிதைகள்,சிறப்பு பேச்சு என்பன இடம்பெற்று நிறைவில் தமிழீழத் தேசியக்கொடி கையேந்தல் ,நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலை தொடர்ந்து எமது தாரகமந்திரத்துடன் நிறைவு பெற்றது.