ரஷ்யா உக்ரைனை ஊடுருவியுள்ளதைத் தொடர்ந்து மாறியுள்ள ஜேர்மன் மக்களுடைய மன நிலைமை

17 0

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியுள்ளதைத் தொடர்ந்து, ஜேர்மன் மக்களுடைய மன நிலைமையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நாளை தங்களுடனும் ஒரு நாடு போருக்கு வருமானால், தங்களுக்கு ஆதரவாக, நேட்டோ அல்லது ஐரோப்பிய ஒன்றியம் பொன்றதொரு அமைப்பு தேவை என ஜேர்மானியர்கள் பலர் கருதுகிறார்கள்.உலகம் முழுவதும் பாதுகாப்புக்கு ஒரு அச்சுறுத்தல் உள்ளது என ஜேர்மானியர்கள் கருதும் நிலையில், ஜேர்மானியர்களில் பத்தில் ஏழு பேர், ஐரோப்பாவில் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் உள்ளது என கருதுகிறார்கள்.

இந்த எண்ணம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னிருந்ததைவிட, தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. விளைவு? நேட்டோ அமைப்புக்கும் ஐரோப்பிய ஒன்றிய அமைப்புக்கும் ஜேர்மனியில் ஆதரவு அதிகரித்துள்ளதாக தோன்றுகிறது.

ஜேர்மனியும் தனது ராணுவத்தை வேக வேகமாக வலுப்படுத்திவருகிறது. உக்ரைனை ரஷ்யா ஊடுருவியுள்ளதைத் தொடர்ந்து, ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கென்றே 100 பில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளார்.

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியுள்ளதைத் தொடர்ந்து மாறியுள்ள ஜேர்மன் மக்களுடைய மன நிலைமை | Germany Has Changed Since Russia Annexed Ukraine

Image: Lisi Niesner/REUTERS

ஜேர்மனி தாக்குதலுக்குள்ளாகுமானால், அதை எதிர்கொள்ள ஜேர்மன் ராணுவம் மீள்கட்டமைப்புக்குள்ளாக்கப்படவேண்டியது அவசியமாகிறது.

இந்நிலையில், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், நேட்டோவுடனான உறவின் அவசியம் குறித்து ஜேர்மானியர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, சுமார் 82 சதவிகிதம் பேர், ஐரோப்பாவில் அமைதியை நிலைநிறுத்த அது அவசியம் என கருதுவதாக தெரிவித்துள்ளார்கள். பத்தில் ஒருவர் மட்டுமே, அது அவசியமில்லை என கருதுவதாகத் தெரிவித்துள்ளார்கள்.

அதேபோல, ஐரோப்பாவில் பாதுகாப்பான வாழ்வுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அவசியம் என மூன்றில் இரண்டு பங்கு ஜேர்மானியர்கள் கருதுவதாக தெரிவித்துள்ளார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜேர்மனி உறுப்பினராக இருப்பதற்கான ஆதரவு, கடந்த ஆண்டைவிட ஜேர்மனியில் அதிகரித்துள்ளது. மூன்றில் ஒருவர், ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருப்பது ஜேர்மனிக்கு நல்லது என கருதுகிறார்கள். ஆக மொத்தத்தில், ரஷ்யா உக்ரைனை ஊடுருவியுள்ளதைத் தொடர்ந்து, நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பில், ஜேர்மன் மக்களுடைய மன நிலைமையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது தெளிவாகியுள்ளது.