தங்காலை பழைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹரக்கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்னவுக்கு சில வசதிகளை வழங்குவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (08) அரசு தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.
ஹரக் கட்டாவின் சார்பில் முன்வைக்கப்பட்ட மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் விசாரணைக்குக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி இந்த இதனைத் தெரிவித்திருந்தார்.
சட்டத்தரணிகளைச் சந்திக்க அனுமதிக்கப்பட்ட 15 நிமிட நேரத்தை ஒரு மணி நேரமாக நீடிக்க உத்தரவிட வேண்டும் என்று ஹரக்கட்டா தனது மனுவில் கோரியுள்ளார்.
ஆனால் வழக்கறிஞர்களை சந்திக்க வழங்கப்படும் நேரத்தை அரை மணி நேரம் வரை நீட்டிக்க முடியும் என்று அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

