வீசா வறையறைகளை மீறி நாட்டில் தங்கியிருந்த வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் எல்ல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
எல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து இவர் கைதாகியுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இவர் 38 வயதான ரஷ்யப் பிரஜை எனத் தெரியவந்துள்ளது.
இதேவேளை, குறித்த ரஷ்யப் பிரஜை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எல்ல பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

