தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல்

34 0

தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர்கள் பலருக்கு அறிவிக்காமல் மேற்கொள்ளப்பட்ட புதிய உறுப்பினர்கள் நியமனத்திற்கு எதிராகவும்வவுனியா நீதிமன்றில் வழக்கொன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மகளீர் பேரவை செயலாளரும் மத்திய குழு உறுப்பினருமான சூரிய பிரதீபா தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது கருத்து வெளியிடுகையிலையே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழர் விடுதலைக் கூட்டணியின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் என்ற போர்வையில் புதிது புதிதாக சிலர் தற்போது கட்சிக்குள் புகுந்துள்ளனர்.

அவ்வாறு புகுந்திருப்பவர்கள் இந்தக் கட்சியை அபகரித்து செல்லவே முயற்சி எடுக்கின்றனர். ஆனால் கட்சியை அபகரித்துச் செல்ல முயற்சிப்பவர்களுக்கு எப்பொழுதும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இடமளிக்கப்படாது என்பதுடன் அவர்களின் வியாபார எண்ணங்களும் ஒருபோதும் நிறைவேறாது.

இவ்வாறான நிலைமையில் தான் கடந்த வாரம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டமும் வவுனியாவில் மிக இரகசியமாக நடாத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் மத்திய குழு உறுப்பினர்கள் பலருக்கு அறிவிக்காமல் கூட்டப்பட்ட இந்த மத்திய குழுக் கூட்டத்தையும் புதிய உறுப்பினர்கள் நியமனத்திற்கு எதிராகவும் தடைகோரி வவுனியா நீதிமன்றில் வழக்கொன்றை தாக்கல் செய்திருக்கிறோம். ” என்றார்.