வவுனியாவில் கடும் காற்றுடன் மழை – 29 குடியிருப்புகள் பாதிப்பு

254 0

வவுனியா – அண்ணாநகர் மற்றும் காக்கை சின்னக்குளம் பிரதேசங்களில் நேற்று பெய்த கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 29 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.

எவ்வாறாயினும் குடியிருப்பில் இருந்தவர்களுக்கு எந்த பதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குடியிருப்புகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரையில் மதிப்பீடு செய்யப்படவில்லை.