கற்பிட்டியில் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் கைப்பற்றல்

125 0

கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி கரையோரப் பகுதியில் மீன் வாடியொன்றில். இந்தியாவிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் புத்தளம் கலால்வரித் திணைக்களத்தினருடன் இணைந்து வெள்ளிக்கிழமை (05) அதிகாலை  சுற்றிவளைப்பு மேற்கொண்டனர்.

இதன்போது சுமார் 40 உரைகளில் 1,200 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதாகவும், இதன்போது எவரும் கைது செய்யப்படவில்லையென்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியெனவும் மதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பீடி இலைகள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்டிருக்கலாமென்று சந்தேகிப்பதாகத் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் புத்தளம் கலால்வரித் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை புத்தளம் கலால்வரித் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.