துர்நாற்றம் வீசிய நிலையில் சடலம் மீட்பு!

130 0

குருணாகல் – கொகரெல்ல பகுதியிலுள்ள வீடு ஒன்றில் துர்நாற்றம் வீசிய நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக கொகரெல்ல பொலிஸார் தெரிவித்தனர் .

கொகரெல்ல பொலிஸாருக்கு கிடைத்த  தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே சடலம் மீட்கப்பட்டுள்ளது .

குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்த 69 வயதுடைய நபரே  இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

குறித்த நபர் கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி தனது மகள் வீட்டிலிருந்து வந்து இந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கொகரெல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.