இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை நிறுத்தக் கோரி மனித உரிமைகள் பேரவை தீர்மானம்

126 0

இஸ்ரேலுக்கான அனைத்து ஆயுத விற்பனையையும் நிறுத்துமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இதற்கான தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது. 47 நாடுகள் அங்கம் வகிக்கும் இப்பேரவையில் 28 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. 6 நாடுகள் எதிராக வாக்களித்தன. 13 நாடுகள் வாக்களிப்பில் பங்குபற்றவில்லை.

காஸா யுத்தத்தினால் 33,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ள நிலையில் இனப்படுகொலை அபாயம் உள்ளதை சுட்டிக்காட்டி இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பின் சார்பில் பாகிஸ்தான் இப்பிரேரணையை முன்வைத்திருந்தது.