தலாய்லாமா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதை சீனாதடுக்கின்றது

22 0

திபெத்தின் ஆன்மீக தலைவர்தலாய்லாமா  இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதை சீனா தடுக்கின்றது என இலங்கையை சேர்ந்த பௌத்த மதகுரு ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தலாய் லாமாவிற்கு புத்தரின் புனிதநினைவுச்சின்னத்தை வழங்கிய  இலங்கை பௌத்தபிக்குகள் குழுவில் இடம்பெற்றிருந்த கலாநிதி வஸ்கடுவே மகிந்தவன்ச தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

தலாய்லாமா குறித்து சீனா என்ன நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பது உங்களிற்கு தெரியும் நீங்கள் நினைவுச்சின்னத்தை வழங்கியமை குறித்து சீனா சீற்றமடைந்திருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் சில வருடங்களிற்கு முன்னர் இலங்கையை சேர்ந்த பௌத்தமத தலைவர்கள் தலாய்லாமா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தனர் என தெரிவித்துள்ளார்.

ஆனால் பிரச்சினை சீனாவிடமிருந்து வருகின்றது ஏன் என தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பௌத்ததலைவர் என்ற அடிப்படையில் நாங்கள் தலாய்லாமாவை மதிக்கின்றோம் அவர் வர்த்தகர் இல்லை என தெரிவித்துள்ள கலாநிதி வஸ்கடுவே மகிந்தவன்ச தேரர் நாங்கள் அவரை மதித்து இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைத்தோம் சீனா அதனை விரும்பவில்லை சீனா எங்கள் அரசாங்கத்திற்கு இது குறித்து அழுத்தம் கொடுத்தது எனவும் தெரிவித்துள்ளார்.

இது எங்களிற்கு பிடிக்கவில்லை அவர் ஒரு பௌத்த தலைவர் அவருக்கு சுதந்திரம் உள்ளது அவரை இலங்கைக்கு அழைப்பதற்கான சுதந்திரம் எங்களிற்குள்ளது எனவும் பௌத்தமதகுரு தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் தலாய்லாமா இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டால் நாங்கள் பெரும்கிழ்ச்சி அடைவோம் இலங்கையர்கள் இமயமலைக்கு சென்றனர் அதில் என்ன பிரச்சினை அவர் பௌத்ததலைவர் அவர் பௌத்தத்தை போதிக்கின்றார் எனவும் இலங்கையை சேர்ந்த பௌத்தமதகுரு தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கை உறவுகளை எப்படி பார்க்கின்றீர்கள் என்ற கேள்விக்கு இந்தியாவே எங்கள் தாய்நாடு எனது கலாச்சார மத தொடர்புகள் இந்தியாவிலிருந்தே இலங்கைக்கு வந்தன எங்கள் மொழியும் இந்தியாவிலிருந்தே ஆரம்பமாகின்றது சமஸ்கிருதம்-;பாலி நாங்கள் இந்தியாவுடன் எங்கள் நட்புறவை வளர்க்கவேண்டும் எங்கள் மூத்த சகோதரர் இந்தியா என குறிப்பிட்டுள்ளார்.