கெஹெலிய ரம்புக்வெலவும் சுகாதார அதிகாரிகளும் 100 மில்லியன் நஷ்;டஈட்டினை வழங்கவேண்டும்

10 0

அரசாங்க மருத்துவமனையில் கண்புரை அறுவைசிசிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட மருந்து காரணமாக கண்பார்வையை இழந்த நோயாளியொருவர் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல  மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடமிருந்து 100 மில்லியன் நஷ்டஈட்டை கோரியுள்ளார்.

கந்தபொலவை சேர்ந்த மகரி ராஜரட்ணம் என்ற நபர் சட்டநிறுவனம் ஊடாக நஷ்டஈட்டை கோரியுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தேசிய மருந்துகட்டுப்பாட்டு அதிகார சபையின் அதிகாரிகள் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தனக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக நஸ்டஈட்டை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ராஜரட்ணம் இழப்பீடு வழங்கப்படாவிட்டால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

இன்விக்டஸ் என்ற சட்டநிறுவனத்தின் ஊடாகவே அவர் தனது நஷ்டஈட்டு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

2023ம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் திகதி தனது கட்சிக்காரர் நுவரேலியா மருத்துவமனையில் கண்சத்திரசிகிச்சை செய்துகொண்டார் ஆறாம் திகதி அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார் மருத்துவமனையில் ப்ரெட்னிசோலோன் அசிடேட்என்ற மருந்தினை பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கினார்கள் என தெரிவித்துள்ளது.

எனினும் குறிப்பிட்ட கண் மருந்தினை பயன்படுத்தியதை தொடர்ந்து தனது கட்சிக்காரர் தலைவலி உட்பட பல பாதிப்புகளை எதிர்கொண்டனர் என சட்டநிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து மருத்துவபரிசோதனைகள் இடம்பெற்றன எனது கட்சிக்காரர் பத்தாம் திகதி மீண்டும் தேசிய கண்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்  அங்கு இடம்பெற்ற மருத்துவபரிசோதனைகள் மூலம் குறிப்பிட்ட கண்மருந்து காரணமாக அவர் தனது கண்பார்வையை இழந்துகொண்டிருப்பது தெரியவந்தது எனவும் குறிப்பிட்டுள்ளது.

அந்த கண்மருந்துகள் தரமற்றவை அந்த மருந்தினை பயன்படுத்தியவர்கள் எண்டோபனைட்டிஸ் நோய் பாதிப்பிற்குள்ளானார்கள் எனவும் அந்த சட்டநிறுவனம் தெரிவித்துள்ளது.