ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முழு உரிமையாளரான ராஜபக்ச குடும்பத்திற்குள் முரண்பாடுகள் மேலும் உக்கிரமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தங்காலையில் நாமல் ராஜபக்ச நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டதன் பின்னர் நாமல் ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட முதலாவது பிரசார நடவடிக்கையாக இந்த பேரணி அமைந்திருந்தது.
இதில் பசில் ராஜபக்ச கோட்டாபய ராஜபக்ச போன்று அவர்களது நெருங்கிய உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
அங்கு கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ச, 69 இலட்சம் வாக்குகளுக்கு சொந்தக்காரர்கள் பலர் உள்ளனர். எனினும் அனைவரும் தந்தையின் மக்கள் ஆதரவை பகிர்ந்து கொண்டவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது தமது குடும்பத்திற்கு எதிராக செயற்படும் அனைவரும் தந்தையின் ஆதரவின் மூலம் பதவி நிலையில் வகிப்பதாக தெரிவித்துள்ளார்.

