கஜமுத்தை விற்பனை செய்யத் தயாராக இருந்த நபரொருவர் கைது

16 0

திவுலப்பிட்டிய பிரதேசத்தின் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கஜமுத்தை விற்பனை செய்ய தயாராக இருந்த நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 07 கிராம் உடைய கஜமுத்தை 4,500,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்டபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவராவார்.

இந்த சம்பவம் தொடர்பாக திவுலபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.