சுஜீவ சேனசிங்கவின் அடிப்படை உரிமை மீறல் மனு ஜூன் 3 இல் விசாரணை!

48 0

தமக்கு எதிரான இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணையை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் அமைச்சர் சுஜீவ சேனசிங்க தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் இன்று (03) தீர்மானித்துள்ளது.

பிரிதி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே மனுவை பரிசீலிக்க ஜூன்  3 ஆம் திகதியை தீர்மானித்து  உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டது.