புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவைகள்

22 0

எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் சொந்த ஊர்களுக்கு செல்லும் மற்றும் மீண்டும் வரும் பயணிகளுக்காக பல சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளன.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை கொழும்பில் இருந்து வெளி மாகாணங்களுக்கான சிறப்பு ரயில் சேவைகள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.