7 நாடுகளிலிருந்து இலங்கைக்குவரும் சுற்றுலா பயணிகளுக்கான விசா விலக்கு நீடிப்பு

29 0

7 நாடுகளிலிருந்து இலங்கைக்குவரும் சுற்றுலாப் பயணிகளுக்கான விசா கட்டண விலக்கு மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் இது அமுலிலிருக்கும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்தியா, ரஷ்யா, சீனா, இந்தோனேஷியா, தாய்லாந்து, ஜப்பான் மற்றும் மலேஷியா ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைவரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது .

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர்  மேலும் குறிப்பிட்டுள்ளார்.