காதில் ஹியர்போன் அணிந்தவாறு நடந்து சென்ற பேராதனை பல்கலை மாணவன் ரயிலால் மோதப்பட்டு உயிரிழப்பு!

103 0

பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் சட்டக் கற்கைகள் பிரிவின் மூன்றாம் வருட மாணவர்  ஒருவர்  பெனிதெனிய பிரதேசத்தில் ரயிலால் மோதப்பட்டு  உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சட்டக் கற்கைப் பிரிவில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்று வந்த வத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த சித்சரதா சில்வா என்பவரே உயிாிழந்துள்ளார்.

ஹியர்போன் கேட்கும் கருவியை காதில் அணிந்து கொண்டு  ரயில் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோதே  நாவலப்பிட்டி – கண்டி ரயிலால் மோதப்பட்டு  இந்த மாணவர் உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேராதனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் விஜித் விஜேகோன் தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.