வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 7 ஆயிரம் மில்லயன் ரூபா ஒதுகீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அநுராதப்புரத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் குறித்த நிவாரண தொகையானது பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயினதும் வங்கி கணக்குகளில் வைப்பீடு செய்யப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
விவசாயிகளின் பொருளாதாரத்தை பலப்படுத்த, விவசாய துறையை மேம்படுத்த, நீர் வளதுறையை கட்டியெழுப்பு அரசாங்கம் கடந்த 2 வருடங்களில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

