சமூக ஊடகங்களை கையாளும்போது கவனமாக கையாளவிட்டால் அதன் விளைவுகள் வேறுவிதமாக அமையும்- பூபாலரட்ணம் சீவகன்(காணொளி)

352 0

சமூக ஊடகங்களை கையாளும்போது கவனமாக கையாளவிட்டால் அதன் விளைவுகள் வேறுவிதமாக அமையும் என சிரேஸ்ட ஊடகவியலாளர் பூபாலரட்ணம் சீவகன் தெரிவித்தார்.

ஊடக விஞ்ஞானம் அறிதலும் சாதக வழி பிரயோகமும் என்னும் தலைப்பிலான கலந்துரையாடல் மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

விஞ்ஞானத்தின் ஊடக சமூக அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் இலண்டன் பி.பி.சி.யின் சிரேஸ்ட ஊடகவியலாளர் பூபாலரட்ணம் சீவகன் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள், விரிவுரையாளர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள்,ஆர்வலர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின்போது ஊடகங்களின் இன்றைய நிலைமை, அவற்றினை கையாளும் வழிமுறைகள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகங்களின் இன்றைய நிலைமை அவை கையாளப்படும் விதங்கள் தொடர்பில் கருத்துகள் பகிரப்பட்டன.