தெங்கு பயிர்ச் செய்கை சபையின் முன்னாள் பொது முகாமையாளர் கைது!

116 0

ஊழியர் நம்பிக்கை நிதிய பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் முன்னாள் பொது முகாமையாளர் சனிக்கிழமை (23)  குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஏழு கோடியே  எழுபத்தேழு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளார்.

தெல்கொட உடுபில பிரதேசத்தைச் சேர்ந்த (64) வயதுடைய  கே.டி.லயனல் தர்மசிறி என்பவரே இவ்வாறு கைது  செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.