தடியால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு; மஹவெலயில் சம்பவம்

103 0

வீடு ஒன்றுன்குள்  அத்துமீறி நுழைந்த சிலர் அங்கிருந்த ஒருவரை தடியால் தாக்கி கொலை செய்த சம்பவம் மஹவெல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 33 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் மாதிபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வது தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.